முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் விளக்கேற்றி அஞ்சலி
(காரைதீவு நிருபர் சகா)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (16)திங்கட்கிழமை கல்முனை மாநகரில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது .
அங்கு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன் பா.அரியநேத்திரன் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் மேயர் தி.சரவணபவான் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி காய்ச்சி அங்கு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது
அங்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எல்லாம் கலந்து கொண்டார்கள்.
அங்கே முதலிலே நெய் விளக்கு ஏற்றப்பட்டு அந்த மக்களுக்காக ஆத்மார்த்த அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கஞ்சி காய்ச்ச பட்டு அங்கிருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது .
அதனை தொடர்ந்து கலந்து கொண்ட அதிதிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்,
கருத்துக்களேதுமில்லை