எரிபொருள் வழங்கலில் வரையறை இன்று முதல் அமுலாகிறது!
எரிபொருள் வழங்கலில் வரையறை இன்று முதல் அமுலாகிறது!
வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் வரையறை செய்யப் பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று(24) முதல் அமுலாகும் வகையில் இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் ஏனைய வாகனங்களுக்கு 10,000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும். பேருந்துகள் மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு இந்த மட்டுப்பாடுகள் இல்லை எனவும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை