பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை விரைவாக முன்னெடுக்கவேண்டும்

பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை விரைவாக முன்னெடுக்கவேண்டும்- பிரதமரிடம் சமந்தா பவர்
யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
தொலைபேசிமூலம் இடம்பெற்ற இந்த உரையாடலின்போது இலங்கையின் பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு யுஎஸ்எயிட் எப்படி உதவுகின்றது என அவர் கேட்டறிந்துள்ளார்.
இந்தமாதம் இடம்பெற்ற அரசியல் அமைதியின்மையின்போது கொல்லப்பட்ட காயமடைந்த இலங்கையர்கள் குறித்து சமந்தா பவர் அனுதாபத்தை வெளியிட்டார் என யுஎஸ்எயிட் பேச்சாளர் ரெபேக்கா சலிவ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களிற்கான ஆதரவை வெளியிட்ட அவர் இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு யுஎஸ்எயிட் உதவும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை விரைவாக முன்னெடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் பொருளாதார அதிர்ச்சிகளை அனுபவிக்கும் அவர்களின் அவசரதேவைகளை நிவர்த்திசெய்வதற்கு இலங்கையில் யுஎஸ்எயிட் தனது திட்டங்களை முன்னிறுத்துகின்றது என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் தூண்டுதலற்ற உக்ரைன் மீதான யுத்தம் காரணமாக அதிகரிக்கும் எண்ணெய் உணவுப்பொருட்களின் விலைகளும் இந்த நிலையை தீவிரப்படுத்தியுள்ளன என சமந்தா பவர் தெரிவித்தார் என யுஎஸ்எயிட் பேச்சாளர் ரெபேக்கா சலிவ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியம் போன்ற இலங்கைக்கு உதவும் சமூகத்துடன் அமெரிக்கா நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என சமந்தா பவர் பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.
May be an image of 2 people, people sitting and indoor

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.