வீனஸ் வில்லியம்ஸை சமன் செய்தார் இகா ஸ்வியாடெக்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலக தரவரிசையில் முதலிடம்… தொடர்ச்சியாக 34 போட்டிகளில் வெற்றி என்ற சாதனைகளுடன் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் வீராங்கனை Coco Gauff உடன் பலப்பரீட்சை நடத்தினார் போலந்து நாட்டைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியாடெக், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.

ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் மட்டுமே நடந்த இறுதி ஆட்டத்தில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் இகா ஸ்வியாடெக் வெற்றியை வசமாக்கினார்.

இதன் மூலம் பிரெஞ்ச் ஓபனில் இரண்டாவது முறையாக வாகைசூடினார். தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றி பெற்று, வீனஸ் வில்லியம்ஸின் சாதனையை சமன் செய்துள்ளார் ஸ்வியாடெக்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.