ஒகஸ்டில் பணவீக்கம் 70% ஐ கடந்தது!

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின்படி, ஒகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பணவீக்கமானது ஜூலை மாதத்தில் 66.7 ஆக இருந்ததாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் 82.5 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 84.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அத்துடன், உணவு அல்லாத பொருட்களின் விலை 57.1 சதவீதம் உயர்ந்துள்ளது. நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருள் வகையைச் சேர்ந்த பணவீக்கமும் 32.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.