ஐ.நா கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள கூட்டமைப்பு எம்.பி..! சற்றுமுன் வெளியான தகவல்

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவர் கலந்துக்கொள்ளவுள்ளார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இந்த நோக்குடன் இன்று ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

51 ஆவது கூட்டத் தொடர்

ஐ.நா கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள கூட்டமைப்பு எம்.பி..! சற்றுமுன் வெளியான தகவல் | Tna Mp Toparticipate In51st Session Of Un Geneva

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான 47 நாடுகள், சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்வதற்க்காக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனும் ஜெனிவா செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.