விண்கல்லில் மோதும் நாசாவின் விண்கலம்
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கார் வண்டி அளவான விண்கலம் ஒன்று அடுத்த வாரம் விண்கல் ஒன்றில் மோதவுள்ளது. அவ்வாறு மோதிய இடத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஹேரா விண்வெளித் திட்டம் ஆய்வு செய்யவுள்ளது.
நாசாவின் இரட்டை விண்கல் திசைமாற்ற சோதனை விண்கலம் வரும் திங்கட்கிழமை (26) டெமொர்போஸ் என்ற விண்கல்லில் மோதவுள்ளது. இந்த மோதலுக்குப் பின் விண்கல்லின் பயணப்பாதையில் சிறிய மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுவது இது முதல்முறையாகும்.
டெமொர்போஸ் 11 மில்லியன் கிலோமீற்றருக்கு அப்பால் இருப்பதால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. பூமியை நோக்கி வரும் விண்கல் ஒன்றை திசைதிருப்பும் சோதனை முயற்சியாகவே இது இடம்பெறுகிறது. இந்நிலையில் விண்கலம் மோதும் நிகழ்வை உலகெங்கும் உள்ள வானியலாளர்கள் கூர்ந்து அவதானிக்கவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் ஐரோப்பிய விண்கலமான ஹேரா பயணிக்கவுள்ளது. 2024இல் விண்வெளிக்கு அனுப்பப்படும் ஹேரா 2026 இல் டெமொர்போஸ் விண் கல்லை அடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து விண்கல் மோதலால் ஏற்பட்ட பாதிப்புகளை அது ஆராயும்.
கருத்துக்களேதுமில்லை