மன்னர் சார்லஸிடம் கையளிக்கப்பட்டது சிவப்பு பெட்டி -அரச குடும்பம் வெளியிட்ட புகைப்படம்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவப்பு பெட்டி
இங்கிலாந்தின் அரசர் பொறுப்பை மூன்றாம் சார்லஸ் ஏற்றதை தொடர்ந்து அவரிடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவப்பு பெட்டி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த புகைப்படத்தை அரச குடும்பம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்ததை அடுத்து, அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ், அரச பொறுப்பை ஏற்றிருக்கிறார். பக்கிங்காம் அரண்மனையில் உள்ள அலுவலக அறையில் அவர் இருக்கும் புகைப்படத்தை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.
அவருக்கு அருகே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவப்பு பெட்டியும் உள்ளது.
உள்ளே என்ன உள்ளது
பிரிட்டன் ஆட்சியாளரிடம் இருக்கும் இந்த சிவப்புப் பெட்டியில் இங்கிலாந்து மற்றும் ராஜ்யங்களில் உள்ள அரசாங்க அமைச்சர்கள் மற்றும் கொமன்வெல்த் மற்றும் பல பிரதிநிதிகளின் ஆவணங்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில், அரச குடும்பம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக வருகிறது. .
கருத்துக்களேதுமில்லை