பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கைநாவிதன்வெளி மத்திய முகாமில் முன்னெடுப்பு!

 

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்றைய தினம்(28) காலை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாவிதன்வெளி மத்திய முகாமில் மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,த.கலையரசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் , பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.