இன்று முதல் தடவையாக கூடும் தேசிய சபை

தேசிய சபை

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(29) காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தேசிய சபைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகர் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இதனிடையே, நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பிலான தெரிவுக் குழு கூட்டமும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (29) நடைபெறவுள்ளது.

முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள்

 

இன்று முதல் தடவையாக கூடும் தேசிய சபை | The National Assembly Meet The First Time Today

இந்தக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இந்தக் கூட்டம் கூடவுள்ளதாக நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.