சாய்ந்தமருது கடலில் மிதந்த சடலத்தை மீட்ட கல்முனை கடற்படை..

சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதந்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவியுடன் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (03) காலை இனம் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்து சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சாய்ந்தமருது பொலிஸார் கல்முனை கடற்படையின் உதவியை நாடியிருந்தனர். இதனடிப்படையில் கடலில் மிதந்த 55-60 வயது மதிக்கத்தக்க வயோதிய பெண்ணின் சடலத்தை மீட்டு கல்முனை கடற்படை முனைக்கு கொண்டுவரப்பட்ட சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணை நடவடிக்கைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் குறித்த பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.