சிறுவர்களை மிரட்டி கசிப்பு குடிக்க வைத்த இளைஞன்!சிறுவர்களை மிரட்டி கசிப்பு குடிக்க வைத்த இளைஞன்!
சிறுவர்களை கோவிலுக்கு பின்புறம் உள்ள ஏரிக்கரையில் வைத்து தடியை காட்டி மிரட்டி கசிப்பு குடிக்குமாறு வற்புறுத்திய 25 வயதுடைய கசிப்பு கடத்தல்காரரை கைது செய்துள்ளதாக ஓயமடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பத்து வயது மற்றும் ஐந்து வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு மிரட்டல்களுக்கு உட்படுத்தபட்டதாக தெரியவந்துள்ளது.
காவல்துறை அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஓயாமடுவ காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்ததுடன் இரண்டு குழந்தைகளையும் தமது தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த இடத்திற்குச் செல்லும் போது இரண்டு குழந்தைகளும் கசிப்பு குடித்ததால் அதிக போதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கசிப்பு அருந்தியதால் சுகவீனமடைந்த பத்து வயது சிறுவன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை