செவ்விளநீருக்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு
செவ்விளநீருக்கு தட்டுப்பாடு
இலங்கையில் செவ்விளநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘வெள்ளை ஈ’ என்ற பூச்சியால் செவ்விளநீர் அதிகம் பாதிக்கப்படுவதால், டிசம்பர் மாதத்துக்குள் இந்த தட்டுப்பாடு ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னந்தோப்புகளில் பரவும் வெள்ளை ஈ பூச்சி செவ்விளநீர் குலைகளின் மஞ்சள் நிறத்தில் ஈர்க்கப்படுவதால் இவற்றை அதிகளவில் பாதித்துள்ளது.
இம்முறை பெரும்பாலும் செவ்விளநீர் ஏற்றுமதிச் சந்தையை இலக்காகக் கொண்டு பயிரிடப்படுகிறது. பெரும்பாலான செவ்விளநீர் காய்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஏற்றுமதி பாதிப்பு
கடந்த ஆண்டு, 95 லட்சம் செவ்விளநீர் காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெள்ளை ஈ பாதிப்பு பரவி வருவதால், எதிர்காலத்தில் செவ்விளநீர் ஏற்றுமதிச் சந்தையும் பாதிக்கப்படலாம்.
இலங்கையில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் தென்னந்தோப்புகள் வெள்ளை ஈ தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார். இருப்பினும், வெள்ளை ஈயை அழிக்கக்கூடிய பூச்சிகொல்லி அல்லது பிற பூச்சிகள் இதுவரை கண்டறியப்படவில்லை.
கருத்துக்களேதுமில்லை