நிலையான தேசிய கொள்கை நாட்டிற்கு அவசியமாகும் – ஜனாதிபதி
அரசாங்கம் மாற்றம் அடையும் சகல சந்தர்ப்பங்களிலும், மாற்றம் அடையாத நிலையான தேசிய கொள்கை நாட்டிற்கு அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருந்து உற்பத்தி தொழில்சாலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் அனைவரும் ஒரு நிலையான தேசிய கொள்கையின் கீழ் இருக்க வேண்டும். நாம் ஒரே கொள்கையில், 15 முதல் 20 ஆண்டுகள் செயல்படுவோமாயின் நாடு வீழ்ச்சியடையாது.
ஒவ்வொரு அரசாங்கம் மாற்றம் அடையும் போதும், கொள்கை மாற்றம் இடம்பெற்றது. அரசாங்கத்தில் அமைச்சர்கள் மாற்றமடையும் போதும், கொள்கை மாற்றம் இடம்பெறுகின்றது. அவ்வாறாயின் எப்படி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை