மின்சக்தி – வலுசக்தி தொழிற்துறையினருக்கு முழுமையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க திட்டம்
மின்சக்தி மற்றும் வலுசக்தி துறையில் தொழிற்துறையினருக்கு முழுமையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணங்கியுள்ளார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தொழிற்துறையினர் எதிர்நோக்கியுள்ள நிதி பிரச்சினை தொடர்பில் வலுசக்தி அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆகியோரின் தலைமையில் தொழிற்துறையினருடன் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது தொழிற்துறையினரை, புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களை நோக்கி அனுப்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கும், எரிசக்தி மூலங்களில் இருந்து உயரிய பயனை கொண்டு வரும் உலகளாவிய செயற் திட்டம் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை