தெருக்களில் பிச்சை எடுக்கும் பிரபல இந்தி நடிகை!

பிரபல இந்தி நடிகையொருவர் பிச்சையெடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

90களில் இந்தி திரையுலகில் சின்னத்திரை நாடகங்களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நுபுர் அலங்கார். இதனை தொடர்ந்து இவர் ராஜா ஜி, சாவாரியா உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் ஸ்ரீவத்சவாவை திருமணம் செய்து கொண்ட இவர் மும்பையில் வசித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்த இவர், தற்போது செய்துள்ள செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆம் அவரே தான் பிச்சை எடுக்கும் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விளக்கமும் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “சில காலமாக குடும்பத்தில் பிரச்சினைகள் இருப்பதால் என் குருவின் ஆலோசனைப்படி சன்னியாசத்தை ஏற்றுக்கொண்டுள்ளேன்.

பிச்சை எடுப்பதால் கிடைக்கும் பணத்தை வைத்தே தற்போது தங்களது வாழ்க்கை ஓடுகிறது” என கூறியுள்ளார். அவரது இந்த முடிவு அவரது ரசிகர்களையும் திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.