பகிடிவதை: ருஹுணு பல்கலைக்கழக 2ஆம் வருட மருத்துவ மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
ருஹுணு பல்கலைக்கழகத்தின் 2ஆம் வருட மருத்துவ மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மருத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை 2ஆம் வருட மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்த முயற்சித்ததன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் 200 இற்கும் மேற்பட்ட மருத்துவ பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பதில் பீடாதிபதி சன்ன யஹதுகொட தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை