பெண்கள் நடிப்பில் பெண்களே உருவாக்கிய ஹோலிவுட் படம்
ஆப்ரிக்க தேசமான தஹோமேயில் 1800களில், அந்த தேசத்தை காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட அகோஜி என பெயர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை கதையாக சொல்லும் ஹோலிவுட் படம் தி உமன் கிங். உயரிய உடை அலங்காரங்கள், பிரமாண்டமான காட்சியமைப்புகள், அசர வைக்கும் போர் காட்சிகள் என அதிக பொருட்செலவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் உருவாகியுள்ள படைப்பு தான் தி உமன் கிங்.
இயக்குனர் முதல் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அதிகபட்சமாக பெண்களே பங்குபெற்றுள்ளனர். வியோலா டேவிஸ், துஸோ மெபெடு, லஷனா லைன்ச் உள்ளிட்ட நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில் நடிகைகள் மட்டுமே நடித்துள்ள படம் என்ற சிறப்பையும் இது பெறுகிறது. ஜினா பிரின்ஸ் பைத்உட் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் தமிழிலும் திரைக்கு வர உள்ளது.
கருத்துக்களேதுமில்லை