கனடாவில் வாழும் இலங்கை தமிழ்பெண் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவில் உள்ள பாடசாலை வாரியம் அறங்காவலர் பதவிக்கான மறு தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவரும் போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில் கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தனது டுவிட்டர் பதிவில் குறித்த பெண் தொடர்பாக வெளியிட்டுள்ள புகைப்பட பதிவு வைரலாகியுள்ளது.
ஆதரவு கோரும் ஹரி ஆனந்த சங்கரி
TDSB எனப்படும் Toronto District School Board பாடசாலை வாரியம் தொடர்பான பதிவையே அவர் வெளியிட்டுள்ளார். ஹரிஆனந்த சங்கரி தனது பதிவில், Scarborough Northன் TDSB Trustee (அறங்காவலர்) பதவிக்கான மறுதேர்தல் பிரசாரத்திற்காக யாழினி ராஜகுலசிங்கத்திற்கு பிரசாரம் செய்ய சென்றேன்.
Scarborough Northல் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு அவர் வாதிடுவார் மற்றும் உங்கள் குரல்களைக் கேட்பார் என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை