நாட்டில் 96 இலட்சம் மக்கள் வறுமையில்
நாட்டில் 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக
பேராதனை பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இத்தகவலை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
“2019ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 30 இலட்சம் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தனர் என்றும் அந்த தொகை தற்போதைய ஆய்வின்படி 96 இலட்சமாக உயர்ந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் சுமார் 42 வீதமான மக்கள் தற்போது வறுமையில் வாடுவதாக எமது ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையில் 26 வீதமான மக்கள் வறுமையில் வாடுவதாக அண்மையில் உலக வங்கி ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஆனால், அவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட அதிகமானோர் வறுமையில் வாடுகிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.” என்று பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை