காலா பட நடிகையுடன் ஜோடியாக நடிக்கும் ஷிகர் தவான்!

திரையுலகிற்கு அறிமுகமுகமாகவுள்ள தவான், காலா படத்தில் ஜோடியாக நடித்த ஹூமா குரேஷி இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி கோப்பையும் பெற்றுக் கொடுத்தார் ஷிகர் தவான். இதுவரை கிரிக்கெட்டில் வலம் வந்த தவான் இப்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். பாலிவுட்டில் ‘Double XL’ என்ற படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமுகமாகவுள்ள தவான், காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஹூமா குரேஷியுடன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் ஜாகீர் இக்பால், மஹத் ராகவேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். பூஷன் குமார், கிரிஷன் குமார், விபுல் டி ஷா, அஷ்வின் வர்டே, ராஜேஷ் பாஹ்ல், சாகிப் சலீம், ஹூமா குரேஷி மற்றும் முடாஸ்ஸர் அஜீஸ் ஆகியோர் மற்றும் டி-சீரிஸ், வக்காவ் பிலிம்ஸ், ரெக்லைனிங் சீட்ஸ் சினிமா இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.