பிரசவத்துக்குப்பின் வயிற்றைச் சுற்றிவரும் தழும்புகளை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா?
கர்ப்பமான முதல் மாதத்திலிருந்தே இதற்கான அக்கறை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது, தரமான மாய்ஸ்ச்சரைசரை வயிற்றைச் சுற்றி மென்மையாகத் தடவி வரலாம். கண்ட கண்ட எண்ணெய்கள், மற்றவர்கள் பரிந்துரைக்கும் க்ரீம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, அதீதமாக எதையும் செய்ய வேண்டாம்.
கர்ப்ப காலத்தில் வயிற்றுப்பகுதியானது பலூன் மாதிரி மெள்ள மெள்ள விரிவடைந்துகொண்டே போகும். குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப விரிய ஆரம்பிக்கும். அதனால் சருமப் பகுதியும் விரிவடைந்து, பிரசவத்துக்குப் பிறகு சுருங்குவதால் தழும்புகள் ஏற்படும்.
தழும்புகள் பெரிதாகத் தெரிவதைத் தடுப்பது மட்டுமன்றி, அந்தப் பகுதியிலுள்ள சருமம் வறண்டுபோகாமல் பார்த்துக்கொள்வதும் கர்ப்ப காலத்தில் அவசியம். சரும வறட்சி காரணமாக வயிற்றுப் பகுதியைச் சுற்றி அரிப்பும் ஏற்படலாம். அதையும் தவிர்க்க வேண்டுமென்றால் தரமான மாய்ஸ்ச்சரைசரை தடவி வந்தாலே போதுமானது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உபயோகிக்கவும்.
கருத்துக்களேதுமில்லை