ரணிலை சந்திக்க தயங்கும் மொட்டு எம்பிக்கள்
ரணில் விடுத்த அழைப்பு
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து வீடுகள் எரிக்கப்பட்ட 74 நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று மாலை விசேட கலந்துரையாடலுக்கு வருமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று பிற்பகல் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதா இல்லையா என்ற தயக்கம் மொட்டு எம்.பிக்களிடையே ஏற்பட்ட நிலையில் இன்று காலை இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை வரை 44 எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், மாலை நடந்த கூட்டத்தில் 34 எம்.பி.க்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது வீடுகள் எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈட்டுக்கான படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு தெரிவித்த அதிபர் , அதற்கான நட்டஈட்டுத் தொகையை நாடாளுமன்றத்தின் மூலம் அங்கீகரித்து வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
கருத்துக்களேதுமில்லை