இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள்..
இதேவேளை, செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
இலங்கையும் அவுஸ்திரேலியாவும் சட்டவிரோதமாக எல்லைகளை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு படகையும் தடுப்பதற்கும், இடையூறு செய்வதற்கும், இடைமறித்து திருப்பி அனுப்புவதற்கும், கூட்டுப்பொறுப்பை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை