நேரடியாக எலிமினேஷனுக்கு சென்ற ஜி.பி. முத்து.. காரணம் ஜனனி தான்
நேரடியாக நாமினேஷன்
பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் நான்காவது நாளின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில், பாத்திரம் கழுவும் அணியின் தலைவர் ஜனனி தன்னுடைய அணியில் இருந்து ஒருவரை Swap செய்து, வீட்டிற்கு வெளியே கார்டன் ஏரியாவில் தூங்கி வரும் ஒருவரை தன்னுடைய அணியில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
கடுப்பான ஜி.பி. முத்து
அதன்படி ஜி.பி. முத்துவை காரணத்துடன் அணியில் இருந்து Swap செய்து வேறொரு நபரை தன்னுடைய அணிக்கு எடுத்துள்ளார். இதனால் கடுப்பான ஜி.பி. முத்து நான் என்ன வேலை செய்யவில்லை என்று கேட்கிறார். இதனால் வீட்டிற்குள் சற்று வெடிகுண்டு வெடித்துள்ளது.
ஏனென்றால், இதன்முலம் அடுத்த வாரத்திற்கான நேரடி நாமினேஷனுக்கு சென்றுள்ளார் ஜி.பி. முத்து. பொறுத்திருந்து பார்ப்போம் இனி என்னென்ன நடக்கிறது என்று..
கருத்துக்களேதுமில்லை