காத்தான்குடி விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி
மட்டக்களப்பு – காத்தான்குடி, புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
புதுகுடியிருப்பு சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய ரக லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார்சைக்கிளில் மூவர் பயணித்துள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பை சேர்ந்த 16 மற்றும் 18 வயதான இரண்டு இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை