நயன்தாரா சர்ச்சைகளுக்கு பதிலடி! இணையத்தில் ட்ரெண்டாகும் விக்னேஷ் சிவனின் பதிவு

நடிகை நயன்தாராவின் வாடகைத் தாய் சர்ச்சைக்கு பதில் கொடுக்கும் விதமாக தத்துவங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து வருகிறார் .

தமிழ் சினிமா பிரபலங்கள்விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்ததில் இருந்து தலைப்பு செய்தியாகி வருகின்றனர்.

அக்டோபர் 9-ம் தேதி, தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதை சமூகவலைதளங்களில் அறிவித்தனர்.

ரசிகர்கள் இதைப் பற்றி மகிழ்ச்சியடைந்தாலும், வாடகைத் தாய் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

நயன்தாரா சர்ச்சைகளுக்கு பதிலடி! இணையத்தில் ட்ரெண்டாகும் விக்னேஷ் சிவனின் பதிவு | Vignesh Shivan Response To The Surrogac

இன்ஸ்டகிராம் ஸ்டோரியில்  விக்னேஷ் சிவன் பதில்

 

இதையடுத்து சர்ச்சைகளுக்கு பதிலடி தரும் விதமாக தொடர்ந்து இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் சில தத்துவங்களை பகிர்ந்து வருகிறார்.

”எல்லாம் சரியான தருணத்தில் உங்களுக்கு வரும். பொறுமையாய் இரு. நன்றியுடன் இரு” என பதிவிட்டிருந்தார்.

விக்னேஷ் இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் அவருக்கும் நயன்தாராவுக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதோடு மற்றொரு பதிவில், “இந்த உலகத்தை மாற்ற நினைத்தால், வீட்டிற்கு சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.