வாஸ்துபடி படுக்கையறை – மறந்தும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
பொதுவாக ஒரு வீட்டு கட்டுமானப்பணி ஆரம்பிக்கும் போது அதற்கான வாஸ்துமுறை மற்றும் தொடங்கும் நேரம் போன்ற விடயங்கள் கருத்துக் கொள்ளப்படுகிறது.
ஏனென்றால் வாஸ்து படி ஒரு வீட்டை அமைக்காவிட்டால் அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் எழும் என்பது ஐதீகம். இதன்படி ஒரு வீட்டில் காணப்படும் ஒவ்வொரு அறைக்கும் அதனை அமைப்பதற்கென திசைகள் இருகிறது. அந்த திசைகளுக்கேற்ப வீட்டின் அறைகள் அமைக்கப்பட வேண்டும்.
பிரதான படுக்கையறை
பொதுவாக எமது வீடுகளிலிருக்கும் பிரதான அறைகளில் படுக்கையறையும் ஒன்றாகும். இந்த அறை வீட்டின் வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும்.
மேலும் அறை வடகிழக்கு மூலையில் இருந்தால் அறையினுள் இருக்கும் படுக்கை தென்மேற்கு மூலையில் வைக்கப்படல் கட்டாயமானதாகும்.
ஒரு வீட்டில் நாம் உறங்கும் போது தெற்கு திசையை நோக்கி தலை இருக்குமாறு வைத்து உறங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நிம்மதியான துாக்கம் கிடைக்கும்.
மேலும் வீட்டில் வடகிழக்கில் திசையில் படுக்கையறை வைத்தால் அதே மூளையில் யந்திரம் ஒன்றும் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் வாஸ்து தோஷங்களை சரிசெய்யப்படுகிறது.
பொதுவாக வாஸ்துபடி அமைக்கப்படுகிற பிரதான படுக்கையறைக்கு நீலம், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வண்ணம் தீட்டப்படல் அவசியம்.
இதனைதொடர்ந்து வீடுகள் வாஸ்துபடி அமைக்கப்படாவிட்டால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும். அவற்றை சுத்தபடுத்துவதற்கு நறுமணம் கொண்ட மெழுகுவர்த்திகள் மற்றும் நறுமண எண்ணெய்கள் உதவுகின்றன.
மேலும் இது போன்ற எதிர்மறையான சக்திகளை முற்றாக நீக்குவதற்காக ஒரு சிறிய கிண்ணத்தில் நொறுக்கப்படாத கடல் உப்புடன் கற்பூரத்தை சேர்த்து வைக்க வேண்டும். ஆனால் தவறாமல் கற்பூரத்தை தினம் தினம் மாற்ற வேண்டும்.
கருத்துக்களேதுமில்லை