யாழில் இராஜாங்க அமைச்சரை கடிக்க முயன்ற நாய் சுட்டுக்கொலை! தகவல் வெளியிட மறுக்கும் காவல்துறை
யாழ் வல்வெட்டித்துறை பகுதிக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தேயின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நாய் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு வல்வெட்டித்துறைக்கு சென்றிருக்கின்றார்.
அங்கு வளர்ப்பு நாய் இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தேயை கண்டு குரைத்ததுடன் கடிக்க முற்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நாய்
அதனால் இராஜங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் அந்த நாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அந்த நாய் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய மெய்ப்பாதுகாவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வழங்க காவல்துறையினர் மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை