வடக்கில் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை மீறியும் பாரிய போதைப்பொருள் கடத்தல்!

நாட்டுக்குள் போதைப்பொருள் எவ்வாறு வருகின்றது, இராணுவமும், காவல்துறையினரும் புலனாய்வு அமைப்புகளும் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது, என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண இளைஞர் சமூகத்தை பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலமும் அரச பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் எவ்வாறு போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்று வருகின்றது.

வடக்கில் அதிகரித்த போதைப்பொருள் பாவனை

வடக்கில் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை மீறியும் பாரிய போதைப்பொருள் கடத்தல்! | Sri Lannka Government Army Drug Jaffna Northern Sl

 

இதேவேளை கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு கூட மக்கள் அச்சப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

போதைப்பொருள் பாவனையினால் நோய்வாய்ப்பட்ட சுமார் 140 பேர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் விசேட பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ள தனது 15 வயது மகன் தனக்கு வேண்டாம் என சுன்னாகத்தில் உள்ள தாய் ஒருவர் காவல்துறையினருக்கு கடிதம் எழுதியதையடுத்து, சிறுவன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அச்சுவேலி புனர்வாழ்வு பாடசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவதானம் செலுத்தாத புலனாய்வு பிரிவு

வடக்கில் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை மீறியும் பாரிய போதைப்பொருள் கடத்தல்! | Sri Lannka Government Army Drug Jaffna Northern Sl

 

பத்து பேருக்கு ஒரு சிப்பாய் என வடக்கில் பெரும் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் கடத்தல் மிகவும் ஆபத்தான முறையில் பரவி வருகின்றது.

யாராவது தகவல் கொடுத்தால், கடத்தல்காரர்களுக்கு அதைச் செய்தது யார் என்ற தகவல் மிக விரைவாகக் கிடைக்கிறது. அது எப்படி இடம்பெறுகிறது என எங்களுக்குத் தெரியாது.

இந்த விடயத்தில் காவல்துறையினரும் இராணுவ புலனாய்வு அமைப்புகளும் உரிய கவனம் செலுத்தாதது ஏன்? போதைக்கு அடிமையான இளைஞர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை கொடுத்து அவற்றை வாங்க ஆசைப்படுகிறார்கள்.

அதனால் தான் திருட்டு, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் விநியோகம், விற்பனை மற்றும் பாவனைக்கு எதிராக வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பில் ஊடகங்கள் ஊடாக தொடர்ச்சியாக தெளிவுபடுத்தப்படுமானால், இளைஞர்களை ஓரளவுக்கு இந்த அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற முடியும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.