வீட்டின் மீது மண்மேடு சரிந்தது – மூவர் மாயம்!

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் சிக்குண்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மண்சரிவில் சிக்குண்ட நால்வரில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மண் சரிவில் சிக்குண்ட ஏனைய மூவரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல் சப்ரகமுவ. மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலிய மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.