பெரும்போக செய்கையை ஆரம்பிக்குமாறு ஆலோசனை
எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் பெரும்போக செய்கையை ஆரம்பிக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.
மழை நீர் மூலம் நிலத்தை தயார்ப்படுத்தி , விதைத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உட்பட்ட குளங்களில் காணப்படும் நீரை இதனூடாக பாதுகாப்பான முறையில் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேமிக்கப்படும் நீரை அடுத்த போகத்தின் போது பயன்படுத்திக்கொள்ள முடியும் என நீர்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை