புங்குடுதீவில் 50 வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் கையளிப்பு..

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்(சூழகம்) ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட புங்குடுதீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஐம்பது வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

மேற்படி நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை(10.10.2022) மாலை-5 மணியளவில் புங்குடுதீவு இறுப்பிட்டியில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் தலைமையில் இடம்பெற்றது.

புங்குடுதீவு இறுப்பிட்டியைச் சேர்ந்தவரும், தற்போது புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழ்ந்து வருபவருமான சமூக ஆர்வலர் சின்னையா மோகனின் இரட்டைப் புதல்வர்களான நிரோஷன், நிவாஸ் ஆகியோரின் இருபதாவது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவர்களின் 250, 000 ரூபா பெறுமதியான நிதிப் பங்களிப்பில் இந்த உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது ஓவ்வொரு குடும்பத்திற்கும் தலா-5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், சூழகம் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் பீரிஸ் ராஜூ மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.