சுமந்திரன் – சாணக்கியனுக்கு அச்சமில்லை! கூட்டமைப்பின் முக்கிய பிரபலம் பகிரங்க சவால்..

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சுமந்திரன் – சாணக்கியனுக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பல்ல என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சுமந்திரன் – சாணக்கியனுக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிலும் டுவிட்டர் பதிவிலும் செய்திகள் வெளியிடபட்டன.

இந்த செய்திகளில் குறித்த சந்திப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிக் சொல்ஹெய்ம் இடையில் இடம்பெற்றது என தெரிவிக்கபட்டிருந்தது.

இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் கலந்துரையாட்டதா என அந்த கூட்டம் தொடர்பான நிலைப்பாடடை வினவும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“இந்த கூட்டம் தொடர்பான செய்திகளை நான் நிச்சியமாக மறுதளிப்பேன். இந்த சந்திப்புக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

சுமந்திரனும் சாணக்கியனும் கடந்த சில நாட்களாக பல சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பலரின் சர்ச்சைக்குறிய நபர்களை சந்தித்து வருகின்றனர்.கடந்த நாட்களில் சீன தூதுவரையும் சந்தித்திருந்தனர்.”என கூறியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.