சரத் பொன்சேகாவை தேடிவந்த பிரதமர் பதவி! அம்பலமான உண்மை
ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கணவர் ஊடாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனக்கு அனுப்பிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி நடந்த போராட்டத்தின் பின்னர், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் பதவியை ஏற்குமாறு டயான கமகேவின் கணவரான கெப்டன் சேனக சில்வா ஊடாக எனக்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமர் பதவி
நான் கூறியபடி செயற்பட்டிருந்தால், கோட்டாபய ராஜபக்ச தற்போது நாட்டின் அதிபர் பதவியில் இருந்திருப்பார்.
எவ்வாறாயினும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள நான் சில நிபந்தனைகளை முன்வைத்தேன். இந்த சந்திப்பின் பின்னர், கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
பின்னர், என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய கோட்டாபய ராஜபக்ச, பிரதமராக என்னை நியமிப்பது சம்பந்தமாக மகிந்த ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்ச ஆகியோர் அஞ்சுவதாகவும் தனக்கும் ஒரு வித பயம் இருக்கின்றது எனவும் கூறியதாக சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை