நாடுவந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பதுளை எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் அமைந்துள்ள இராவணா அருவியின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தண்ணீர் பாய்ந்தோடும் இராவணா அருவிக்கு அருகில் செல்வது மற்றும் அதற்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு காவல்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இதனிடையே இன்றைய தினம் மேல், சபரகமுவை, மத்திய மாகாணங்களில் மாத்திரமின்றி காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மீட்டருக்கும் அதிகமான மழைப்பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேச வானிலை
அதேவேளை, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை நேரங்களில் அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள இராவணா அருவி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை