யாழில் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது..

யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் இன்றைய தினம்(15.10.2022) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்.நகர் பகுதியில் உள்ள மூன்று புடவைக் கடைகளில் வேலை செய்துக்கொண்டு, 1000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மானிப்பாய்

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள கடை ஒன்றில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்கானை சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அண்மையில் உள்ள கடை ஒன்றில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மானிப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.