எம்மை திருடன் என்று , எமக்கு எதிராகப் போலிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன : நாமல் ராஜபக்ஷ !
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டிய தொகுதி கூட்டத்தில் இன்று (16) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், போராட்டம் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை, போராட்டக்காரர்கள் தொடர்பில்தான் விமர்சனம் உள்ளது. சிலர் உண்மையாகவே சிஸ்டம் சேஞ்க்காக போராடினார்கள். சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, போராட்டத்தையே தமதாக்கிக்கொண்டனர். இதனால் என்ன நடந்தது என்பது குறித்து உண்மையான போராட்டக்காரர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
அன்று எம்மை திருடன் என்றனர். எமக்கு எதிராகப் போலிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சட்டப்பூர்வமாக அவற்றில் இருந்து நாம் விடுதலை பெற்றோம். இன்றும் அரசியல் இருப்புக்காக சேறுபூசும் பிரசாரத்தை அவர்கள் கைவிடவில்லை எனவும் கூறினார்.
ராஜபக்ஷவிடம் கறுப்பு பணம் உள்ளது என கூறியவர்கள், கொழும்பில் உள்ள அக்காவுக்கு பணம் கொடுத்துள்ளனர். அவரின் பட்டியலில் எம்மை விமர்சித்தவர்கள் உள்ளனர். சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம். கொள்கை அடிப்படையிலான அரசியல் வாதிகளுக்கு ஆதரவு வழங்குங்கள் எனவும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை