வீட்டிற்கு செல்லப் போகும் 12ஆயிரத்திற்கும் அதிக அரச ஊழியர்கள்! வெளியான விசேட அறிவிப்பு

ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பொன்றை ஓய்வூதிய திணைக்களம் வழங்கியுள்ளது.

அதன்படி ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்கள் தாம் ஓய்வுபெறும் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன் ஓய்வூதிய விண்ணப்பத்தை அனுப்புவது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நடைமுறையை முறையாக பின்பற்றினால், ஓய்வுபெறும் அரச ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களை ஓய்வு பெறும் நாளில் இருந்து வினைத்திறனாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டிற்கு செல்லப் போகும் 12ஆயிரத்திற்கும் அதிக அரச ஊழியர்கள்! வெளியான விசேட அறிவிப்பு | Government Worker Srilanka Pension Public Servant

 

இதேவேளை இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு இடையில் 60 வயதை எட்டிய நிலையில் ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டும் என்றும் ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓய்வு பெறுவதற்கான விருப்ப வயது

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60ஆக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கட்டாய ஓய்வு பெறும் வரை பணி நீடிப்புடன், ஓய்வு பெறுவதற்கான விருப்ப வயது 55ஆக குறைக்கப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளரால் கையொப்பமிடப்பட்டு, அனைத்து, அரச நிறுவன தலைவர்கள், அரச வங்கிகள் மற்றும் சட்டப்பூர்வ சபைகள் உட்பட வணிக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு, இது தொடர்பான புதிய சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

வீட்டிற்கு செல்லப் போகும் 12ஆயிரத்திற்கும் அதிக அரச ஊழியர்கள்! வெளியான விசேட அறிவிப்பு | Government Worker Srilanka Pension Public Servant

 

அதன்படி, எந்தவொரு அதிகாரியும் இந்த வயது வரம்பைத் தாண்டி (55) பணியாற்ற விரும்பினால், அவர், செயல்திறன் மற்றும் செயல்திறன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சேவை நீடிப்புக்கு விண்ணப்பிக்காமல் 60 ஆண்டுகள் கட்டாய ஓய்வு வயது வரை தொடர்ந்து பணியாற்றலாம்.

எவ்வாறாயினும், 55 – 60 வயதிற்குள், ஒரு அதிகாரி தனது விருப்பப்படி பணியிலிருந்து ஓய்வு பெறலாம்.

இதேவேளை தற்போது 60 வயதிற்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் இந்த ஆண்டு டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் 60 வயதை நிறைவு செய்பவர்கள் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் ஓய்வு பெற வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.