கனடாவில் இடம்பெற்ற மற்றுமொரு கோர விபத்து -ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி…
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பலியானதுடன் தாயார் படுகாயமடைந்திருந்தார்.
இந்த நிலையில் ஒன்றாரியோ மாகாணத்தின் Guelph பகுதியில் வெலிங்டன் மற்றும் பிசி வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்ற மற்றுமொரு கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிக்கப் ரக வாகனமும் பயணிகள் வாகனம் ஒன்றும் மோதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் பயணிகள் வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மூடப்பட்டது வீதி
அத்துடன் இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் வாகனத்தை செலு்தியவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளை நடத்தும் நோக்கில் குறித்த வீதியை தற்காலிகமாக காவல்துறையினர் மூடி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கருத்துக்களேதுமில்லை