இவ்வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டம் – கர்தினால் விடுத்துள்ள அறிவிப்பு
நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இ்வருடத்தின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை குறைத்துக் கொள்ளுமாறு கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீர்கொழும்பு, படபத்தல புனித தெரேசா தேவாலயத்தின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (17) நடைபெற்ற ஆராதனையின் போதே மேற்கண்ட வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
ஆடம்பரமாகச் செலவு
நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது தேவாலயங்கள் மற்றும் ஏனைய இடங்களின் அலங்காரங்களுக்காக ஆடம்பரமாகச் செலவு செய்வதை தவிர்க்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
பசியால் ஏராளமானோர் வாடுவதால், ஏழைகளுக்கு உணவு வழங்கும் செயலை மாத்திரமே இந்த கிறிஸ்மஸ் காலப்பகுதியில் செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை