கனடாவில் அதிகாலை 2 மணிக்கு கொல்லப்பட்ட தமிழர்! கைதான கொலையாளியின் பெயர் வெளியானது
கனடாவில் கத்தி குத்து தாக்குதலில் உயிரிழந்த தமிழ் இளைஞர்.
சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது.
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
Durhamன் Ajaxல் உள்ள மது அருந்தகத்தின் வாசலில் சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது வாகன நிறுத்துமிடத்தில் இருவர் சண்டையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அடுத்தவரைப் பலமாகத் தாக்கிவிட்டு காரில் ஏறித் தப்பி சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. கடுமையான வெட்டுக் காயங்களுடன் ரெறென்ரோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இளைஞர் அங்கு பின்னர் உயிரிழந்தார்.
cp24
28 வயதான குறித்த இளைஞர் தமிழர் என தெரியவந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் அவரது பெயர் வெளியிடப்படவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேட்ரிக் சார்ட் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது second degree கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு பிறகு அதே வாகன நிறுத்துமிடத்தில் பேட்ரிக் மீது வாகனம் ஒன்று மோதியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
விபத்துக்குள்ளான கார் சம்பவ இடத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டது. வாகனத்தை ஓட்டிய ஓட்டுனர் பொலிஸ் காவலில் உள்ளார் என தெரியவந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை