சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25,000 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது !
அநூராதபுரத்தில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் தீர்வை வரி செலுத்தப்படாமல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25,000 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அநூரதபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விஜயபுர பிரதேசத்தில் அநூரதபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு அநூரதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் சட்டவிரோதமான முறையில் தீர்வை வரி செலுத்தப்படாமல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25,000 சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 62 வயதுடைய ஒருவர் எனவும் அவர் அநூரதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் சம்பவம் தொடர்பில் அநூரதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்துக்களேதுமில்லை