ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் இராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த சிறீதரன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனை, பாலவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துக் கலந்துரையாடினார்.
நீண்ட நெடிய தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் காலத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காலம் வரை ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துவரும் கே.எஸ் இராதாகிருஷ்ணன், ஈழ விடுதலைப் போர் மெளனிக்கப்பட்ட பின்னரும் கூட, எமது மக்களுக்காக ஓங்கி ஒலிக்கும் ஒரு குரலாகவே இருந்து வருகின்றார் என்று இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பின் போது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு நோக்கிய அடுத்தகட்ட நகர்வுகள், அதில் இந்தியாவின் வகிபங்கு, அதற்காக தமிழக மற்றும் இந்திய மத்திய அரசுடனான பேச்சுகளை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகள், தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாட வேண்டியதன் தேவைப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசப்பட்டன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை