கனடாவில் வீடு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள்: ஒருவர் கைது…
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைத்ததையொட்டி பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு சுயநினைவற்ற நிலையில் இரு பிள்ளைகளும் ஒரு ஆணும் கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர்.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள Laval நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைத்ததையொட்டி பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.
திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் அவர்கள் அந்த வீட்டுக்கு விரைந்தபோது, சுயநினைவற்ற நிலையில் இரு பிள்ளைகளும் ஒரு ஆணும் கிடப்பதைக் கண்டு, அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
François Sauvé/Radio-Canada
அவர்களில், 13 வயது பெண் மற்றும் 11 வயது பையன் ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த அந்த 46 வயதுள்ள ஆண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்குத் தகுதியாகும்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பிள்ளைகளின் தாய் அதிர்ச்சியில் உள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த பிள்ளைகளுக்கும் அந்த ஆணுக்கும் என்ன உறவு என்பதைத் தெரிவிக்க பொலிசார் மறுத்துவிட்டாலும், அது குடும்ப வன்முறையாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துக்களேதுமில்லை