கிராம உத்தியோகத்தர்களின் தொழில்சார் பிரச்சினைகள்..! நடவடிக்கை எடுக்க வேண்டுமென சஜித் வலியுறுத்தல்
கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (19) அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர் சேவைக்கு தாபன விதிக்கோவையொன்று இல்லை எனவும், புதிய சம்பளக் கொள்கையொன்று இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும், கிராம அலுவலர்கள் மூலம் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டளைச் சட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழில்சார் பிரச்சினைகள்
இவ்வாறான நிலையில் அவர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை