வேலைநிறுத்தம் செய்வதற்கு முன் என்னுடன் கலந்துரையாடுங்கள் – பந்துல குணவர்தன
எந்தவொரு பணிப்பகிஷ்கரிப்புக்கும் முன்னதாக தன்னுடன் கலந்துரையாடலுக்கு வருமாறு அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
பணிப்புறக்கணிப்புக்கு முன்னர் கலந்துரையாடலில் ஈடுபடுவதே பொருத்தமானது எனவும், பிரச்சினையை தீர்ப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சரவையின் அங்கீகாரமும் ஒரு கட்டத்தில் பெறப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தனக்குக் கீழ் உள்ள நிறுவனங்களில் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஒவ்வொரு நாளும் முயற்சிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை