கள்ளு தொடர்பில் விசாரணை!
சட்டவிரோதமான மற்றும் ஆரோக்கியமற்ற முறையில் நாளாந்தம் சுமார் 115,000 லீற்றர் கள்ளு உற்பத்தி செய்யப்படுவதாக நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாளாந்த கள்ளு நுகர்வு 160,000 லீற்றர்கள் ஆகும். ஆனால் தினசரி கள்ளு உற்பத்தி 45,000 லீற்றராகக் காணப்படுகிறது. இவ்வாறு மேலதிகமாக தயாரிக்க ஆரோக்கியமற்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், மதுபான உற்பத்தியாளர்களே விற்பனை நிலையங்களை நடத்தி அதன் மூலம் அரசாங்கத்திற்கு வரியை இழப்பை ஏற்படுத்துகின்றனர். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கலந்துரையாடலின் போது பணிப்புரை விடுத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை