லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு : தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!..
அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள. அதன் காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதென நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் தெரிவித்துள்ளது. நோட்டன் ப்ரிஜ் மற்றும் கெனியன் நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கான நீரேந்தும் பகுதிகளிலும் பலத்த மழை பதிவாகியுள்ளது.
விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான்பாய ஆரம்பித்துள்ளதோடு, கெனியன் நீர்த்தேக்கத்னித் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் அதன் நீர் வெளியேறும் தாழ்நில பகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை