மீண்டும் சடுதியாக குறைக்கப்பட்ட கோதுமை மாவின் விலை..!
விலை
கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு – புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
மொத்த விலை 265
இந்தநிலையில், 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை